நயன்தாராவை விட பிரபலமான ஜூலி தான் என் படத்தின் நாயகி: காமெடி நடிகர்

சனி, 29 ஜூலை 2017 (00:52 IST)
வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடித்த படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ். இவர் தற்போது சொந்த படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ஜூலி தான் நாயகி என்றும் அறிவித்துள்ளார்.



 
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மரியாதையுடன் பார்க்கப்பட்டார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் அவருக்கு குவிந்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தற்போது எல்லோர் மனதிலும் அவர் வில்லியாக பார்க்கப்படுகிறார். 
 
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கூல்சுரேஷ்,  தான் தயாரிக்கவிருக்கும் படத்தில் ஜூலியை நாயகியாக்க விரும்புவதாகவும் இதுகுறித்து அவர் வெளியே வந்தவுடன் பேச்சுவார்த்தை  நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். நயன்தாரா, ஹன்சிகாவை விட மிகக்குறுகிய நாட்களில் பிரபலமானவர் என்பதால் அவரை நாயகியாக தேர்வு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்