நான் இப்பவே வீட்டுக்கு போறேன்: காயத்ரி, ஆர்த்தியால் கதறி அழுத ஜூலி

வெள்ளி, 7 ஜூலை 2017 (01:38 IST)
கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமாவை சேராத ஒருவர் ஜூலி மட்டுமே என்பதால் அவரையே டார்கெட் செய்ய என்றே ஒரு கூட்டம் உள்ளது. குறிப்பாக காயத்ரி மற்றும் ஆர்த்தி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜூலியை கேலி, கிண்டல் செய்து வெறுப்பேற்றி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 'நர்ஸ் வேலையை விட்டுட்டு ஏன் வந்தாய்? என்று ஜூலியை ஆர்த்தி கேட்க, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அந்த பணத்தில் என் அப்பா அம்மாவுக்கு வீடு வாங்கி தருவேன் என்று கூற உடனே காயத்ரி ஏன் உழைச்சு சம்பாதிச்சு வீடு வாங்க வேண்டியதானே என்று வம்புக்கு இழுக்க ஒரு கட்டத்தில் ஜூலி அழுதே விட்டார்.
 
உடனே நான் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியே போகப்போகறேன் என்று அழுது கொண்டே ஜூலி கூற அவரை ஓவியாவும், தரணியும் சமாதானப்படுத்தினர். இன்றைய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட பாதி இந்த சண்டைதான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்