நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Siva

வெள்ளி, 19 ஜூலை 2024 (10:06 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவர் ஜான்வி கபூர் என்பதும் இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரா என்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்து வரும் நிலையில் தென்னிந்திய திரையுலகில் அவர் என்ட்ரி ஆகி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஃபுட் பாய்சனிங் காரணமாக ஜான்வி கபூர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்தார். இதனை அடுத்து அவரது உடல் மேலும் மோசமானதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஜான்வி கபூர் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஜான்வி கபூர்  நடித்த ’உலஜ்’ என்ற ஹிந்தி படம் வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்