கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் பொன்னியின் செலவ்ன் 2 திரைப்படம் ரிலீஸான நிலையில் தற்போது சைரன் மற்றும் இறைவன், எம் ராஜேஷ் இயக்கும் படம் மற்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படம் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படங்களுக்கு இடையில் இப்போது அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் அவர் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்