ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் சென்சார் தகவல்!

vinoth

புதன், 14 பிப்ரவரி 2024 (11:20 IST)
ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஜெயம் ரவி ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.இந்த படத்துக்கு சென்சார் போர்ட் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்