கும்பகோணத்தில் பிரம்மாண்ட காட்சிகளைப் படமாக்கும் ஜெயம் ரவியின் சைரன் படக்குழு!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:47 IST)
ஜெயம் ரவி நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அகிலன் திரைப்படமும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் இந்த பட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் இப்போது கும்பகோணத்துக்குப் படக்குழு முகாமிட்டுள்ளது.

அங்கே பிரம்மாண்டமான தேர் திருவிழா காட்சியையும் ஆக்‌ஷன் காட்சியையும் படமாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்