பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த படத்துக்காக எல்ல நடிகர்களும் நீண்ட முடி மற்றும் தாலி வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அப்படியே முடித்த கையோடு அவர்கள் எல்லாம் தங்கள் மற்ற படங்களில் நடிக்க செல்கின்றனர். இந்த படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி அடுத்து இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக முடியை வெட்டி கெட்டப்பை மாற்ற வேண்டுமாம்.