கௌதம் கார்த்திக் படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள் !!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:45 IST)
நடிகர் கார்த்திக்-ன் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் படத்தில் பிரபல நடிகரின் மகள் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் பல இயக்குநர்களின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகர் ராஜசேகரின் – ஜீவிதாவின் இளைய மகள்,. சுவாத்மிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

கௌதம் கார்த்திக் –சுவாத்மிகா நடிக்கவுள்ள புதிய படத்தை நந்தா பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் கார்த்திக் ஏற்கனவே நடித்து ஹிட் அடித்த வருஷம் 16 என்ற படத்தில் சாயலில் இது உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்