ஜெயலலிதா இயற்கை தந்த வரம்... நடிகர் சங்கம் அறிக்கை

வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (11:47 IST)
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற பிரார்த்திப்பதாக நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 
 
"இயற்கை நமக்கு தந்த வரம், தமிழ் மக்களுக்காக தமிழர்களின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா. உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம். விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்."
 
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்