மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான ஒரு ஆளுமையாக இருந்தவர் ஜெயகாந்தன். தன்னுடைய சிறுகதைகளுக்காகவும், நாவல்களுக்காகவும் மிகப்பெரிய வாசகர் பரப்பைக் கொண்டிருந்த ஜெயகாந்தன், ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.
ஜெயகாந்தனைப் பற்றி இன்றைக்குள்ள இளைய தலைமுறைக்கு தெரியாத விஷயம், அவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதுதான், தன்னுடைய கதைகளையே யாருக்காக அழுதான் மற்றும் உன்னை போல் ஒருவன் என திரைப்படங்களாக எடுத்துள்ளார்.