கைதான இடைத்தரகரிடம் இருந்து ஹெலிகாப்டர் பரிசு பெற்ற நடிகை!
புதன், 15 டிசம்பர் 2021 (08:07 IST)
பிரபல நடிகை ஒருவர் இடைத்தரகர் ஒருவரிடம் ஹெலிகாப்டர் பரிசு பெற்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்கள் இடைத்தரகர் சுகேஷ் என்பவரிடம் ஏராளமான பணம் பெற்றதாகவும் இருவருக்குமிடையே நட்பு இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது
இந்த நிலையில் சமீபத்தில் சுகேஷ் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களிடமும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்
இந்த நிலையில் சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்றை பரிசு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது