’’ மாமனிதன்’’ பட 2 வது சிங்கில் ... யுவன் டுவீட்

வியாழன், 27 மே 2021 (16:07 IST)
தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் மாமனிதன் படத்தின் முதல் பார்வை, வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, மாமனிதன் பட முதல் சிங்கிலை இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,மாமனிதன் படத்தில் 2 வது சிங்கில் ’’ஏ ராசா’’ என்ற பாடல் நாளை காலை 11:3 0 க்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அப்டேட் பார்த்தை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Second single from Maamanithan Releasing Tomorrow [ Friday 28 ] at 11.30 A.M. #YeRasa pic.twitter.com/CsDp8CyqJU

— Raja yuvan (@thisisysr) May 27, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்