அவதார் திரைப்படத்தின் இரண்டு, மூன்று பாகங்களை எடுக்கயிருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். உலகின் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்தது அவதார் தான். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார்.
தற்போது இவர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாகவுள்ளார், முதல் பாகம் ரூ.15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் பல புதுமைகளை புகுத்த ஜேம்ஸ் கேமரூன் இரவு-பகல் பாராமல் உழைத்து வருகின்றாராம்.