ஜெயிலர் படத்தின் கதை இதுதானா?... வெளிநாட்டு திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்ட கதைச்சுருக்கம்!

செவ்வாய், 18 ஜூலை 2023 (13:52 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்போது முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 40 நிமிடங்களாக இருக்கும் என தற்போது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டு ஜெயிலர் ரிலீஸாகும் திரையரங்குகளில் படத்துக்கான கதைச்சுருக்கம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “ஒரு கொடூரமான வில்லன் தனது குழுவினரோடு சேர்ந்து சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயல, அந்த சிறையின் அனுபவமிக்க ஜெயிலர் அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே கதை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்