ஜெயிலர் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

திங்கள், 17 ஜூலை 2023 (08:21 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதன்படி தற்போது ஜெயிலர் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் நிறுவனத்தின் கோகுலம் கோபாலன் கைப்பற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நிறுவனம்தான் விஜய்யின் லியோ படத்தின் உரிமையையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்