சென்னை புத்தக கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ : சூர்யா அறிவிப்பு!

வியாழன், 5 ஜனவரி 2023 (20:03 IST)
சென்னை புத்தக கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ : சூர்யா அறிவிப்பு!
சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ புத்தகம் அறிமுகம் செய்யப்போவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். 
 
நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் உரையாடல் திரைக்கதை ஆகியவை கொண்ட புத்தகம் தயாராக இருப்பதாகவும் இந்த புத்தகத்தை நாளை தொடங்க இருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் அறிமுகம் செய்ய போவதாகவும் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
‘ஜெய்பீம்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ஜெய்பீம் புத்தகமும் நல்ல விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்