ரஜினி, விஜய், சூர்யா படங்களுக்கு பின் ட்விட்டரில் தனுஷ்க்கு கிடைத்த பெருமை

வியாழன், 3 ஜூன் 2021 (08:49 IST)
ரஜினி விஜய் சூர்யா படங்களுக்கு பின் டுவிட்டரில் தனுசின் படத்திற்கு எமோஜி கிடைத்துள்ளது என்ற தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, தளபதி விஜயின் மெர்சல், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது. அதேபோல் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சாஹோ படம் உள்பட ஒரு சில படங்களுக்கு எமோஜி பெறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்திற்கான எமோஜி கிடைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் ஜகமே தந்திரம் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தாலே அந்த எமோஜி தானாகவே தோன்றும் என்பது குறிப்பிடதக்கது
 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்