கார்த்திக் சுப்பராஜுக்கு டைட்டில் கொடுத்த ரஜினி பட பாடல்!

வியாழன், 3 ஜூன் 2021 (08:37 IST)
ஜகமே தந்திரம் படத்துக்கு எப்படி அந்த பெயர் வைக்கப்பட்டது என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டி ஒன்றில்  ’முதலில் இந்த படத்துக்கு தனுஷின் கதாபாத்திரமான சுருளி என்றுதான் டைட்டில் வைக்கலாம் என யோசித்திருந்தோம். ஆனால் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினி பாடல் ஒன்றில் ஜகமே தந்திரம் பாடலைக் கேட்டபின்னர் அதையே தலைப்பாக வைத்தோம்.’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்