தமிழ் சினிமாவில் துரோகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. ஆனால் இவர் மீது கவனம் பெற வைத்த திரைப்படம் என்றால் அது இறுதிச் சுற்றுதான். அதன் பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து அவர் கோலிவுட் மட்டும் அல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதாம்.
இதனால் சூரரைப் போற்று திரைப்படத்தை ரீமேக் செய்து தர சொல்லியோ அல்லது வேறு படத்தை இயக்கவோ அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தர முன் வந்துள்ளார்களாம். ஆனால் சூரரைப் போற்று ரிலிஸூக்கு முன்னரே சுதா அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதனால் இப்போது எந்த படத்தை இயக்குவது என்ற குழப்பத்தில் சுதா உள்ளாராம்.