இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் இல்லாமல் நயன் மட்டும் தனியாக கலந்து கொண்டதால் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற பொய்யான செய்தி ஒன்று வெளியாக ஆரம்பித்தது. ஆனால் விக்னேஷ் சிவன் தனது திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் இருவரின் உறவில் எந்த விரிசலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.