கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மக்கள் கபசுர குடிநீர் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் தினமும் கபசுரக் குடிநீரை காய்ச்சி இலவசமாக காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை வழங்கி வருகின்றனர். இதனை மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி குடிக்கின்றனர். வீட்டிற்கும் எடுத்து செல்கின்றனர்.