கெளதம் கார்த்திக் நடித்த ‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக்கை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ஆர்யாவை வைத்து ‘கஜினிகாந்த்’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கின்றன.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் டீஸரைப் பார்த்தவர்கள், படம் ஆபாசமாக இருக்கிறது என்றனர். இந்நிலையில், ‘எது ஆபாசம்?’ என விளக்கம் அளித்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
“முதலில் புளூ பிலிம் என்றால் என்ன? உலக சினிமாவைப் பொறுத்தவரை அடல்ட் காமெடி அல்லது அடல்ட் ஹாரர் காமெடி என்றுதான் இது அழைக்கப்படும். தினசரி வாழ்க்கையில் சென்சார் கட் எதுவும் இல்லாமல் எத்தனை வார்த்தைகளைப் பேசுகிறோம்… அதைத் திரையில் சொல்வது புளூ பிலிமோ, ஆபாசப் படமோ கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.