சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் இறுதிச்சுற்று

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:11 IST)
தமிழ்ப் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது சாதாரணமாகிவிட்டது. இப்போதுதான் விக்ரம் குமார் இயக்கிய 24 படம் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்பட்டது. அடுத்து உடனே இறுதிச்சுற்று திரைப்படம்.


 
 
மாதவன், ரித்திகா சிங் நடித்திருந்த இந்தப் படம், ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெறும் 29 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. 'இறுதிச்சுற்று' திரைப்படம் அக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திரையிடப்படுகிறது'' என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்படம் இந்தியில் 'சாலா கடூஸ்' என்ற பெயரில் வெளியானது. இயக்குநர் சுதா தற்போது 'இறுதிச்சுற்று' படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'குரு' படத்தில் வெங்கடேஷை வைத்து இயக்கி வருகிறார். 
 
இதனை தொடர்ந்து இப்படத்தின் திரையிடலை முன்னிட்டு, படக்குழுவினர் விரைவில் டோக்கியோ பயணப்பட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்