மேற்குலக நாடுகளில் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக கிராமி விருது பார்க்கப்படுகிறது. இந்த விருதை வெல்வது அங்குள்ள இசைக் கலைஞர்களின் வாழ்நாள் லட்சியம் ஆகும். இந்நிலையில் இப்போது இந்த ஆண்டுக்கான கிராமி விருதை அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகரான சந்திரிகா டண்டன் பெற்றுள்ளார்.
சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். அதன் பின்னர் திருமணம் முடிந்து கணவர் ராஜன் டன்டனுடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அவர் அங்கு தொழில்துறைகளில் ஈடுபட்டு ஒருமுக்கியப் புள்ளியாக உருவானார்.