பூர்ணிமா மற்றும் இந்துஜா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் கல்லூரி காலத்திலிருந்து நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இந்துஜா, மற்ற போட்டியாளர்களிடம் பேசுவது போல் சாதாரணமாகத்தான் பூர்ணிமாவிடம் பேசினார்.
இது குறித்து மிகவும் வருத்தத்துடன் பூர்ணிமா விஷ்ணுவிடம் புலம்பி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்துஜா கூறியபோது, சரியானதை செய்ய நேரம் எப்போதும் சரியானது என்று கூறி இருக்கிறார். அவரது இந்த பதிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்