பெண்களுக்காக ‘’பிங்க் பாதுகாப்பு திட்டம்’’!

திங்கள், 19 ஜூலை 2021 (23:36 IST)
சமீபத்தில் கேரள மாநிலத்தில் வரதட்ணைக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினர் இதுகுறித்த விழிப்புணர்வைக் கையில் எடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை வேண்டாம் எனக் கூறி கட்டிய புடவையுடன் மட்டும் உங்கள் மகளை அனுப்பி வையுங்கள் என மணமகள் கூறினார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில் இன்று கேரள மாநில காவல்துறையால் பிங்க் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது அம்மாநிலத்தில் வரதட்சணை தொடர்பான கொடுமைப்படுத்துதல், மற்றும் பொது இடங்களில் பெண்கள் அவமானப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இத்திடம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்