தமிழகத்தில் வருமானம் உயர்வு !

திங்கள், 19 ஜூலை 2021 (23:31 IST)
தமிழகத்தில் தனிநபர் வருமானம்  உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தனிநபர் வருமானம்  உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தனிநபர் வருமானம் சராசரியாக ரூ.2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், வடமாநிலங்களில் தனிநபர் வருமானம் இன்னும்ரூ.75 ஆயிரம்  என்ற அளவில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ரு.1000 கோடிக்கும் மேலாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

எனவே நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்