இரண்டாம் பாகத்தில் ஆர்வம் காட்டும் தனுஷ்

சனி, 25 பிப்ரவரி 2017 (16:12 IST)
தனுஷை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அலட்டல் அதிகம் என்றாலும் அட்ஜஸ்ட் செய்ய  அவர்கள் தயார். ஆனால், அவரோ இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்.

 
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரியை  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியதாகச் சொல்லப்பட்டாலும், இயக்குனர் வேலையும் சேர்த்துப் பார்த்தவர் தனுஷ். பவர்  பாண்டியை இயக்குவதற்கான முன் அனுபவமாக வேலையில்லா பட்டதாரி அவருக்கு அமைந்தது.
 
அதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்கி வருகிறார். கதை, வசனம் அனைத்தும் தனுஷ். இந்தப் படம் முடிந்ததும்  பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடிக்க உள்ளார். படத்துக்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயார்.
 
கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இந்தப் படம் கொடியின்  இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
தனுஷிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இரண்டாம் பாகம், புதுப்பேட்டை 2. நடிப்பீர்களா?
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்