விவாகரத்து வழக்கில் சேர்ந்து வாழ விரும்பம் தெரிவித்த நடிகை ரம்பா!

புதன், 5 ஏப்ரல் 2017 (16:48 IST)
நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தாக செய்திகள் வெளியானது.

 
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக் கோரியும், மேலும் தனக்கு பட  வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும், கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.2.50  லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில் ரம்பா மற்றும் இந்திரக்குமார் இருவருக்கும் கடந்த 3 நாள்களாக அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கியது. இருவரும் சேர்ந்து வாழ விரும்பம் தெரிவித்ததால் நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து ரம்பா விவாகரத்து வழக்கை முடிப்பதாகவும், இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென கூறி அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்