யார் என்ன சொன்னால் என்ன? ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூலிக்கத்தான் செய்கின்றன.
அட்டர் பிளாப், ஓபனிங்கே இல்லை என்ற விமர்சனத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பேர் இருக்கு பரவலாக கல்லாகட்டத்தான் செய்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 60 லட்சங்களை படம் வசூலித்திருக்கிறது.
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது புரூஸ்லீ. இந்தப் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிடுகிறார்கள். பாடல்களை அதற்கும் அடுத்த மாசம். படத்தை அதற்கும் அடுத்த மாசம் - அதாவது செப்டம்பரில் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.