தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் அதுசம்மந்தமான சந்திப்பின் போது இளையராஜா வெற்றிமாறனின் விசாரணை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு படங்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டாராம். இதையடுத்து அவருக்கு இரண்டு படங்களையும் திரையரங்கில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இரண்டு படங்களையும் பார்த்த இளையராஜா வெற்றிமாறனைப் பாராட்டியுள்ளாராம்.