இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வந்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் இணக்கம் இல்லை என சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
அதில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.