இந்நிலையில் மோடியை வரவேற்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரில் தமிழக பாஜகவின் பிரமுகர்களின் புகைப்படங்கள் சதுரங்க போட்டியின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் முகம் இடம்பெறும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் அதிசயமாக இளையராஜாவின் உருவமும் ஒரு சிப்பாய் போல உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இளையராஜா ராஜ்ய சபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்டதால் இப்போது அவரின் உருவமும் இடம்பெற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த போஸ்டர் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.