என்ன நடிக்கவிடலைனா … நான் 'அங்க' போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு

செவ்வாய், 4 ஜூன் 2019 (18:30 IST)
”என்னை தமிழ் சினிமாவில் நடிக்கவிடாவிட்டால் நான் நெட்ஃபிலிக்ஸ்க்கு போயிடுவேன்” என கொந்தளித்து பேசி தன்னுடைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

நேற்று ஒரு இணையதள ஊடகத்திற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில் “காண்ட்ராக்டர் நேசமணி’ கதாப்பாத்திரத்தையும் அதன் உருவாக்கத்தை பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நிருபர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தின் பிரச்சனையைப் பற்றி கேட்டார். அதற்கு  நடிகர் வடிவேலு கூறியதாவது :

”சிம்புதேவன் பெரிய இயக்குனரெல்லாம் கிடையாது. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளருக்கும் எனக்கும் அவர் படம் தான் வரைந்து காட்டுவார்.அவருக்கு நடித்து காட்ட தெரியாது, ஒரு காட்சியில் எனது இரு கதாப்பாதிரங்களும் நடந்து வரவேண்டுமென்றும்,இரண்டு கதாப்பாத்திரங்களின் நடையிலும் வித்தியாசம் காட்டவேண்டும் எனவும் சிம்பு தேவன் கூறினார்.

 நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நடித்து காட்டுங்கள் என்று கேட்டதற்கு அவர் எனக்கு நடிக்க தெரியாது என்று சிரித்தார்.”

மேலும் ”ஒரு வரலாற்று படம் பண்ணும்போது அதற்கு சரியான தொழில்நுட்ப கலைஞர்கள் தேவை! தற்போது, 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் எனக்கு மூன்று கதாப்பாத்திரங்கள். ஆனால் ஒரு பாட்டுக்கான  படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்கு முன்னே தொழில்நுட்ப கலைஞர்கள் மாறிவிட்டனர்.

இதுகுறித்துக் கேட்டதற்கு, தயாரிப்பாளர் ஷங்கர் தான் மாற்றச்சொன்னார் என்று சிம்புதேவன் கூறினார். இப்படி எல்லாத்தையும் அவர் இஷ்டத்துக்கு மாத்துனா பேசாம அவரையே டைரக்ட் பண்ணச்சொல்லமே என்று கேட்டேன். உடனே அவர் வெளியிலே போய் என்னயவே மாத்தச்சொல்லிட்டார் என்று சொல்லிட்டார்.

என்னுடைய ”சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவார்” என்ற காமெடியை போல் தான் இது இருக்கிறது. ஷங்கர் கிராஃபிக்ஸை நம்பி படம் இயக்குபவர். எனக்கு எதுக்கு கிராஃபிக்ஸ்,வடிவேலுவுக்கு என்றுமே உடல் மொழி தான் தேவை. எனக்கு வாய்ப்பு தந்தா நான் தமிழ் சினிமாவில் நடிப்பேன். இல்லையென்றால் என்னை ஹாலிவுட்டிற்கு அழைக்கிறார்கள், நான் நெட்ஃபிளிக்ஸில் நடிச்சிட்டு போறேன்” என்று  அந்தப் பேட்டியில் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்