என் தம்பியை அறைவேன் ...சயீஃப் அலிகான் மகள் ஓபன் டாக் ...

வியாழன், 24 ஜனவரி 2019 (13:43 IST)
ஹிந்தி நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அவர் நடிப்பில் வெளியான முதல் படமான கேதார்நாத் வெற்றி பெற்றது முதல் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பின்னர் அவர் நடிப்பில் வெளியான சிம்பா படமும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அவரது குட்டி தம்பி  தைமூர் கான் ( சயீஃப் அலிகான் - கரீனா கபூரின் மகன் ) பற்றி அவர் பெருமிதமாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :
 
தைமூர் அலி கான் தற்போது பிரபலமானவராக உள்ளார்.  என் தம்பியை புகைப்படம் எடுக்க ஆர்வம் புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டுகின்றனர்.அவனைப் பற்றிய செய்திகளும் வெளியாகின்றன. ஆனால் நான் அப்படி அல்ல. கடினமாக உழைத்தால்தான் என்னைப் பற்றி செய்திகள் வெளியாகிறது என கூறினார்.
 
மேலும் உங்கள் பெரிய தம்பி இப்ராஹிமை அறைவீர்களா என்று கேட்ட போது அறைவேன் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்