உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் நாட்டுச் சர்க்கரை...!
கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
நாட்டுச் சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் நாட்டுச் சர்க்கரை தொண்டை மற்றும் நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது.
உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம். கரும்பு சர்க்கரை இயற்கையானது. இதில் கலோரிகள் குறைவு. மற்றும் இதிலிருக்கும் இரும்பு சத்து உடல் நலத்தை ஊக்குவிக்கிறது. இதனால், உடல் மற்றும் உடல் பாகங்கள் வலுவடைகின்றன.
நாட்டுச் சர்க்கரையில் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உடலில் ஏற்படும் சேதங்களை சரி செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.