ஷகீலா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் விவரித்துள்ளார். அதில் தான் 17 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன், சினிமா வாய்ப்பு கேட்டு நான் யாரிடமும் செல்லவில்லை. சினிமா உலகம் என்னை தேடிவந்தது என்றார்.
செக்ஸ் படங்களில் நடித்தாலும், கவர்ச்சியாக நடித்தாலும், உடம்பை காட்டி நடித்தாலும் நான் சினிமாவுக்கு வந்த வழி சரியான வழி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் 'சில விஷயங்கள்' நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் இரையாகவில்லை என்றார்.