“நான் இன்னும் இயக்குநராகவில்லை” – தனுஷ் ஓப்பன் டாக்

புதன், 26 ஏப்ரல் 2017 (11:31 IST)
“நான் இன்னும் இயக்குநராகத் தயாராகவில்லை” என தனுஷ் தெரிவித்து உள்ளார்.

 
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல திறமைகள் கொண்டவர் தனுஷ். இவர் முதன்முதலாக இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் சமீபத்தில் வெளியானது. அனைத்து தரப்பினராலும் பாராட்டைப் பெற்றுள்ளது இந்தப் படம். ரஜினி உள்பட பல  பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளனர். 
 
ஆனால், இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார் தனுஷ். இயக்கத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்வதற்காக குறும்படங்களை இயக்கத் தொடங்கிய தனுஷ், இதுவரை 17 குறும்படங்களை இயக்கியிருக்கிறார். ஒவ்வொன்றிலும் ஒரு பாடம் கற்றுக் கொண்டுள்ளாராம். 
 
ஆனாலும், தான் இன்னும் முழுமையான இயக்குநராகவில்லை என்கிறார் தனுஷ். “நான் இன்னும் இயக்குநராகவில்லை. ஒரு  குருட்டு நம்பிக்கையில் இயக்கியதுதான் இந்தப் படம்” என ஓப்பனாகப் பேசியுள்ளார் தனுஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்