டிவி தொகுப்பாளியான ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது “ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்” ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலை அண்மையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சில கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு ரம்யா, லெஸ்பியன்,கே, இருபாலர் என்று அனைவரையும் பிடிக்கும் எப்படி இருந்தால் என்ன பிரச்சனை என்று கோபமாக பதிலளித்துள்ளார்.