பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை கடந்து மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் வையாபுரி எப்போதும் கணேஷ் அதிகம் சாப்பிடுகிறார் என்று குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கணேஷின் உணவு பழக்கம் பற்றி வையாபுரியை தவிர வேறு யாரும் புகார் கூறுவது இல்லை. கணேஷை விட வையாபுரி தான் உணவை பற்றி அதிகம் யோசிக்கிறார்.