எனக்கு அது ‘ஏ’ படம் என்று தெரியாது: அதுல்யா ரவி

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:11 IST)
சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது என்றும் ஏ சான்றிதழ் என்பது வெறும் ஆபாச காட்சிகள் மட்டுமின்றி வன்முறை காட்சிகள் உள்பட பல காரணங்கள் இருக்கிறது என்றும் அதுல்யா ரவி தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த படத்துக்கு என்ன சான்றிதழ் கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் யோசிக்க வில்லை என்றும் இந்த படம் நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் ஒப்பந்தமான படம் என்றும் கூறினார்.
 
மேலும் இந்த படத்தில் நான் ஒரு சின்ன அங்கம்தான் என்றும் இது ஒரு ஜாலியான படம் என்றும் கருத்து சொல்கிறோம் சமூகத்தை திருத்த போகிறோம் என்ற கதை இல்லை என்றும் பார்த்து ரசித்து சிரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்