காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகள், மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை அதிகம் பிசியாகிவிட்டார் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.
இவருக்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தும், முன்னணி தொகுப்பாளராக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கடந்த சில வருடங்களுக்கு முன் மீண்டும் தொகுப்பாளராக கால் பதித்தார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ், 'சரிகமப' சீனியர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் இவரை திரும்பி பார்க்க வைத்தது.