நடிகை தீபிகாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகை

திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:15 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக ஜெய்னப் என்ற பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். 
காதலர்களான நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் டிஸ்னிலேண்டிற்கு சென்றபோது பலருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆனால் ஜெய்னப் கான் என்ற ரசிகை தீபிகா மற்றும் ரன்வீரை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை தூரத்தில் இருந்து  வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த தீபிகா சிரித்தபடியே வந்து அந்த பெண்ணின் கேமராவை பறித்து, திட்டியதுடன் தன்னை தாக்கியதாக ஜெய்னப் சமூக  வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 
ஜெய்னப் அதை சமூக வலைதளத்தில் அந்த வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் ரன்வீர் மற்றும் தீபிகா தன்னை திட்டியதுடன், தாக்கியதாக ஜெய்னப் புகார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்னப் கூறுகையில், ரன்வீர், தீபிகாவை பின்தொடரவில்லை. அவர்களை தற்செயலாக பார்த்ததாலும், தீவிர ரசிகை என்பதாலும்  வீடியோ எடுத்தேன். தூரத்தில் இருந்து என்னை போன்று யார் வேண்டுமானாலும் வீடியோ எடுத்திருக்கலாம். நான் வீடியோ எடுத்ததை பார்த்த தீபிகா  சிரித்தபடியே என்னை நோக்கி வந்தார். நான் கூட அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வருகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை கண்டபடி  திட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்.
 
ரன்வீர், தீபிகா ரசிகர்களை கொண்டாடுவது போன்று நடிக்கிறார்கள். நிஜத்தில் அவர்கள் அப்படி இல்லை. நேரில் ஒரு முறை பாருங்கள், நான் சொல்வது உண்மை என்பது உங்களுக்கே தெரியும் என்கிறார் ஜெய்னப்.
 

#DeepikaPadukone & #Ranveersingh enjoying holiday Abroad... spotted in Disneyland @entertainmenttube #celebrityblogger #travelgoals #travelholic #celebritytravel #bollywood #blogger #bollywoodblogger @deepikapadukone @ranveersingh #ranveersingh #deepikapadukone

A post shared by Entertainment Tube -ET! (@entertainmenttube) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்