நடிகர் சுதீப் தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தப் படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக ‘முடிஞ்சா இவனபுடி’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். புலி’ படங்களின் வில்லனாக நடித்தவர் நடிகர் சுதீப். கன்னட படஉலகில் முன்னணி நடிகராக உள்ள சுதீப், சில கன்னட படங்களையும் இயக்கி உள்ளார். நடிகர் சுதீப், தன் மனைவி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களது திருமணம் 2001ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு சான்வி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து விவாகரத்து கேட்டு கணவன், மனைவி கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார்.