பாலியல் தொல்லை எனக்கு ஏற்படவில்லை - பிரபல நடிகை விளக்கம்

வியாழன், 27 மே 2021 (21:07 IST)
பிஎஸ்பிபி பள்ளியில் சமீபத்தில்  நடந்த பாலியல் தொல்லை விரகாரம்  தான் படித்துக் கொண்டிருந்த போது, அனுபவித்துள்ளதாக நடிகை தெரிவித்த நிலையில் அந்த சம்பவம் தனக்கு ஏற்படவில்லை என விளக்கம்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் சமீபத்தில் 3 மணி நேரமாக விசாரணை செய்தனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று  நடிகை கெளரி கிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''பத்மா சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் நான் அடையாறில் படித்துக்  கொண்டிருந்த போது நடந்தது எனத் தெரிவித்துள்ளார்., அதில், சாதிக் கொடுமை, உடலை வைத்து தவறாக சித்தரிப்பது, மாணவர்கள் மீது பழிபோடுவது போன்ற செயல்களை இப்போது நினைத்தாலும் மனசு பாரமாகிறது ''எனப் பதிவிட்டார்.

இன்று. இதுகுறித்து அவர் ஒரு தகவல் தெரிவித்துள்ளார். அதில், நான் எனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்ருந்த கருத்து வேறொருவருடையது. நான் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுபவிக்கவில்லை ; ஆனால் அனைத்து மீடியாக்களும் நான் இந்த பாதிப்பை அடைந்துள்ளதாக தவறாகச் செய்திகள் வெளியிட்டுள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.

I’d like to clarify that I’ve not faced any kind of sexual abuse in school.
All other media agencies who’ve twisted the story to draw parallels with the PSBB issue, please refrain!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்