அந்த பள்ளியில் படித்ததற்காக தலைகுனிகிறேன் - ஏஆர் ரஹ்மானின் ஸ்லிப்பர் ஷாட்!

வியாழன், 27 மே 2021 (15:27 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் அந்த பள்ளியில் சிறுவயதில் படித்தவர் தான். ஆனால், அப்போதே அவர் பணம் செலுத்த முடியாததால் அவமானப்படுத்தப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் சொல்வது போன்ற  மீம் ஒன்று வைரலாகி வருகிறது. 
 
அதாவது, " நானும் சிறுவயதில் PSBB பள்ளியில் தான் படித்தேன். அங்கு வறுமையின் காரணமாக என்னால் பணம் செலுத்த முடியாததால் என்னை பிச்சை எடுக்க சொன்னார்கள். அதனால் என் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். அந்த பள்ளியில் படித்ததற்கான வருத்தப்படுகிறேன். என்ற மீம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு பெறுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்