தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான அடுத்த திரைப்படம் அரியவன் என்று விளம்பரம் செய்யப்பட்டது. வரும் மார்ச் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நான் இயக்கவில்லை என்றும் இந்த படத்திற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் மித்ரன் ஜவஹர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் கூட இயக்குனர் என மித்ரன் ஜவகர் பெயர் தான் இருந்தது என்றும் ஆனால் திடீரென அவர் இவ்வாறு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அரியவன் என்ற திரைப்படத்தை எனது உதவியாளர் தான் இயக்கியுள்ளார் என்றும் நான் அவருக்கு சில உதவிகள் செய்தேன் என்றும் அதை தவிர இந்த படத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் மித்ரன் ஜவஹர் தெரிவித்துள்ளார்.