மீண்டும் வணங்கான் படத்தை தொடங்கும் இயக்குனர் பாலா… ஷூட்டிங் எப்போ?

சனி, 25 பிப்ரவரி 2023 (08:54 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் வெளியானது. அதில் “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் ” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாலா கதையில் சில மாற்றங்களை செய்து அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் வணங்கான் படத்தை தொடர உள்ளதாக சொலல்ப்பட்டது. இந்நிலையில் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் இப்போது மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் மீண்டும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் மார்ச் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்