ஒரே ஒரு டுவிட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பித்தாரா சூர்யா? பரபரப்பு தகவல்

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:22 IST)
ஒரே ஒரு டுவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து சூர்யா தப்பித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா தனது டுவிட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட்தேர்வு குறித்தும் நீட்தேர்வு வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆறு பேர் சூர்யா மீதான குற்றச்சாட்டை மென்மையாக கடந்து செல்லலாம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் கூறினர்
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுப்பிரமணியன் அனுப்பிய கடிதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதுகுறித்து தலைமை அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி ஆலோசனை கேட்டபோது சூர்யா மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்தார் 
 
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவை இல்லை என்று கூறியது. ஆனால் அதே நேரத்தில் சூர்யா நீதிமன்றம் குறித்த இனிமேல் கவனமாக பேச வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரை செய்தது. 
 
தலைமை வழக்கறிஞர் சூர்யா மீது பரிந்துரை செய்தது ஏன் என்பது குறித்து விசாரித்தபோது சமீபத்தில் சூர்யா மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு தனது ட்விட்டரில் பாராட்டும் தெரிவித்ததை அடுத்தே இந்த பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பு இணைந்து சூர்யா ஒரே ஒரு டுவிட்டால் தப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்