இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. ரஜினி, அடுத்தடுத்து வேறு வேறு இயக்குனர்களோடு படம் பண்ணிவருகிறார். இந்நிலையில் ரஜினிக்காக தான் எழுதிய கதையைதான் இப்போது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ரஜினிக்காக எழுதிய கதை அதிக பட்ஜெட் காரணமாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த கதையில் இடம்பெற்ற பிரம்மாண்டமான பிளாஷ் பேக் காட்சிகளை நீக்கிவிட்டு, சிம்புவுக்காக சில மாற்றங்களை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.